கிருஷ்ண பகவான் போல் பெண்களை காக்கும் மோடி: சிவசேனா எம்பி

பாராளுமன்றத்தில் முத்தலாக் சட்டமசோதா தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. வினாயக் ராவுத் பிரதமர் மோடியை கிருஷ்ணரோடு ஒப்பிட்டு பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகாபாரதத்தில் திரெளபதிக்கு துரியோதனன், துச்சாதனனால் ஆபத்து வந்தபோது கிருஷ்ண பகவான் திரவுபதியை காப்பாற்றினார். அவருக்கு பாதுகாவலனாக கிருஷ்ண பகவான் இருந்தார். அதேபோல் இப்போது முஸ்லிம் பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

இதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி காவலனாக இருக்கிறார். திரவுபதிக்கு கிருஷ்ணர் எப்படி உதவினாரோ அதேபோல் முஸ்லிம் பெண்களுக்கு பிரதமர் மோடி சகோதரனாக இருந்து உதவி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply