கிராம பஞ்சாயத்து தலைவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

கிராம பஞ்சாயத்து தலைவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பீமாகெடி என்ற கிராமத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவரை அந்த பகுதி மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இந்த பஞ்சாயத்தில் எந்தவித துப்புரவு பணிகளும் நடைபெறவில்லை என்றும் அதனால் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் தெருவில் செல்வதாகவும், இதனால் கொசுக்கள் அதிகமாகி நோய் அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி கிராம பஞ்சாயத்து தலைவரை கட்டி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மக்கள் விழிப்புணர்வு கொண்டு கொதித்து எழுந்தால் மட்டுமே இங்கு நியாயம் கிடைக்கும் நிலை உள்ளது

 

Leave a Reply