கிரண்பேடி மேல்முறையீடு செய்ய நிதி கொடுக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி

கிரண்பேடி மேல்முறையீடு செய்ய நிதி கொடுக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி

ஆளுநர் அதிகாரம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கிரண்பேடி மேல்முறையீடு செய்ய ஒத்துழைக்க மாட்டோம் என்றும், புதுச்சேரி அமைச்சரவை அதற்காக நிதி ஒதுக்காது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநராக இல்லாமல் தனி நபராக கிரண்பேடி மேல்முறையீடு செய்யலாம் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. புதுவை கவர்னர் கிரண்பேடி ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் புதுவை முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply