காஷ்மீர் விவகாரம்: ஜனநாயக படுகொலை என முக ஸ்டாலின் கருத்து

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது, ஜனநாயக படுகொலை என திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறிய முக ஸ்டாலின், காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனநாயகப்
படுகொலையை அரங்கேற்றி விட்டதாகவும், ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை, மத்திய அரசின் அறிவிப்பை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Reply