காஷ்மீர் விவகாரம்: இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தங்களது கண்டனத்தை பாகிஸ்தான் இந்திய தூதரை நேரில் அழைத்து தெரிவித்துள்ளது

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று அழைத்த பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர், ‘இந்தியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் ஐநா பாதுகாப்புச்சபை தீர்மானங்களுக்கும் எதிரானவை என்றும் தெரிவித்ததாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது

முன்னதாக காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்ததற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இது குறித்து கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது

Leave a Reply