காஷ்மீர் பிரச்னை: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து

காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்

நேற்று பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசும் போது அவர் இதனை தெரிவித்ததாக இங்கிலாந்து பிரதமர் மாளிகை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் அண்மையில் பொறுப்பேற்றுள்ள நிலையில் நட்பு நாட்டு தலைவர்களுடன் அவர் தொலைபேசியில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.&

இந்த நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த வாரம் இந்திய சுதந்தர தின கொண்டாட்டத்தின் போது இந்தியர்கள் சிலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போரிஸ் ஜான்சனிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகவும் ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply