காஷ்மீர் பிரச்சனை: டெல்லியில் ஆர்ப்பாட்டம் என ஸ்டாலின் அறிவிப்பு

காஷ்மீரில் 370வது சிறப்பு அந்தஸ்து பிரிவை ரத்து செய்தது மற்றும் அம்மாநிலத்தை இரண்டாக பிரிப்பது ஆகியவற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் திமுக, தற்போது இந்த பிரச்சனைக்காக டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஆகஸ்ட் 22ந் தேதி காஷ்மீர் பிரச்சனைக்க்காக கண்டன ஆர்ப்பாட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன், திமுக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave a Reply