காஷ்மீர் பிரச்சனை எதிரொலி: சம்ஜவுதா விரைவு ரயில் நிறுத்தம்

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்புப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து இந்தியாவில் உள்ள ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது போலவே பாகிஸ்தானும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானின் எதிர்ப்பு இந்தியாவை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தெரிந்தே பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தூதரக ரீதியிலும் போக்குவரத்து ரீதியிலும் இந்தியாவுடனான தொடர்பை துண்டித்து கொள்ளவிருப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்தது

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்னையை அடுத்து டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா விரைவு ரயிலை பாகிஸ்தான் தற்போது நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியர்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்பதும், பாகிஸ்தானியர்களுக்கே பெரும் பாதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கடு

Leave a Reply