காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாமல் நடிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்: தமிழிசை

காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாமல் நடிகர்கள் கருத்து தெரிவித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு பாகிஸ்தானும் திமுகவும் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவேதான் இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தவித பிரச்சனையும் இன்றி நிறைவேறியது

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விஜய்சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்கள் மத்திய அரசினை கண்டித்து பேசி வருகின்றனர். நடிகர்களின் கருத்துக்கு பதிலளித்த தமிழிசை, ‘காஷ்மீர் குறித்து எதுவும் தெரியாமல் நடிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார்.

Leave a Reply