காஷ்மீரை அடுத்து அயோத்தி விவகாரத்திற்கு செல்லும் அமித்ஷா

காஷ்மீரை அடுத்து அயோத்தி விவகாரத்திற்கு செல்லும் அமித்ஷா

முத்தலாக், காஷ்மீர் பிரச்சனைகளை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்ட மத்திய அரசு அடுத்ததாக அயோத்தி பிரச்சனையில் கைவைக்க போவதாகவும் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அமித்ஷா ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்னும் சில நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம், 2 மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என்றூ கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்த பின் பாஜக ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டத்தில் இறங்கும் என்றும் தீர்ப்பு பெரும்பாலும் இந்து அமைப்புகளுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தீர்ப்பு வந்ததும் ராமர் கோவில் கட்டுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நினைப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply