காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து: அமித்ஷா அறிவிப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதி சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக பிரிகிறது என்றும், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் என்றும், லடாக் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

Leave a Reply