காஷ்மீரில் ராகுல் காந்தி-பிரியங்கா பனி சறுக்கு சவாரி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி அங்கு பனி சறுக்குகளில் விளையாடி பொழுதை போக்கினார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி குல்மார்க்கில் தனது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்காவுடன் இணைந்து பனி சறுக்கு வாகனத்தில் சவாரி செய்தார். இருவரும் பனி சறுக்கில் சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் மாறி, மாறி வாகனத்தை ஓட்டுகிறார்கள். ராகுல் காந்தி பனி சறுக்கு கண்ணாடி அணிந்து இருந்தார்.