காவல்துறையினர்களுடன் வாக்குவாதம்: காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு

காவல்துறையினர்களுடன் வாக்குவாதம்: காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு

காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் உதயநிதி பரப்புரை செய்ய ஒரே இடத்தில் அனுமதி தந்தது தொடர்பாக காவல்துறையினரிடம் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வாக்குவாதம் செய்தார். காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று காலை காஞ்சிபுரத்தில் காவல்துறை ஆய்வாளரை பொது இடத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் பிரச்சனையில் ஈடுபட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்,

 

Leave a Reply

Your email address will not be published.