காவல்துறையினர்களின் கருணை மனம்:

காவல்துறையில் உள்ள பெரும்பாலானோர் இறுகிய மனம் கொண்டவர்கள் என பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஷிர்ராலா காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளின் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் கனமழை பெய்து வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்த நிலையி ஷிர்ராலா காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சேரும் சகதிகளும் இருப்பதை அறிந்து உடனே அவர்கள் அந்த வீட்டை தூய்மைப்படுத்த உதவினர். காவல்துறையினர்களின் இந்த கருணை மனத்தை கண்டு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் இந்த காவலர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

Leave a Reply