காலியாக உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் எப்போது?

பரபரப்பு தகவல்

தமிழகத்தில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ, திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ மற்றும் குடியாத்தம் தொகுதி எம்எல்ஏ ஆகிய மூவரும் சமீபத்தில் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்து கருத்து கூறிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் தமிழகத்தில் காலியாக உள்ள சேப்பாக்கம் திருவொற்றியூர் குடியாத்தம் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறினார்

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் இந்த காலியாக உள்ள மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருமா? அல்லது பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

Leave a Reply