கார்த்தி, கவுதம் கார்த்திக் படத்தில் மேலும் ஒரு ஹீரோ

கார்த்தி, கவுதம் கார்த்திக் படத்தில் மேலும் ஒரு ஹீரோ

இயக்குனர் திரு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படமான ‘Mr.சந்திரமெளலி படத்தில் முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு ஹீரோ மேலும் இணைந்துள்ளார்.

அவர் தான் சந்தோஷ் பிரதாப். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர். இந்த படத்தில் அவர் கவுதம் கார்த்திக் நண்பராக நடித்து வருவதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் பழம்பெரும் இயக்குனர்களான மகேந்திரன், அகத்தியன் உள்பட பலர் நடிக்க ஒப்பந்தமாக்யுள்ளனர். ரெஜினா மற்றும் வரலட்சுமி ஆகிய இரண்டு நாயகிகள் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது

Leave a Reply