கார்த்தியின் அடுத்த படத்தில் விஜய் நாயகி

கார்த்தியின் அடுத்த படத்தில் விஜய் நாயகி

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா கார்த்தியின் அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

கார்த்தியின் 19வது படமாக உருவாகவுள்ள படத்தை சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகி, இன்றைய பூஜை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் விவேக் மெர்வின் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது

Leave a Reply