அட்லி பதிவு செய்த ‘காப்பி’ டுவீட்

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தற்போது பிகில் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் நாளை பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அட்லியை காப்பி இயக்குனர் என்று கேலி செய்து வருவார்கள். ராஜா ராணி முதல் பிகில் வரை ஒவ்வொரு படத்தையும் அவர் காப்பி அடிப்பதாக கூறி வருகின்றனர்

இந்த நிலையில் பிகில் படம் ஏற்கனவே ரிலீசாகி விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருப்பதாக ஒரு ரசிகர் கேள்வி எழுப்பி நிலையில் அதற்கு பதிலளித்துள்ள அட்லி பிகில் படத்தின் காப்பி இன்று காலைதான் கொடுத்திருக்கின்றோம். நாளை காலையில்தான் கேடிஎம் ரிலீசாகும். அதன் பின்னரே முதல் காட்சி திரையிடப்படும் என்று கூறியுள்ளார்

இதற்கு ஒரு ரசிகர் கமெண்ட் பகுதியில் ’அந்த காப்பியின் கடவுளே ‘காப்பி’ என்று டைப் செய்ததற்கு நன்றி’ என்று கேலி செய்துள்ளார்

Leave a Reply