‘காப்பான்’ படத்திற்கு எதிராக ஒருவாரத்திற்கு பின் பொங்கிய விஜய்சேதுபதி ரசிகர்கள்

சூர்யா நடித்த காப்பான்’ படத்தில் தாத்தா, மகன், பேரன் என பதவிக்கு வர இது என்ன சித்த வைத்திய சாலையா? என்ற வசனம் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த வசனம் திமுகவை சீண்டி வருவதாக ஒரு வதந்தி பரவியது.

இந்த நிலையில் காப்பான் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் தற்போது திடீரென விஜய்சேதுபதி ரசிகர்கள் காப்பான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் சமுத்திரக்கனி தனது மனைவி நெஞ்சில் ஒரு புத்தகம் வைத்திருந்ததை பார்த்து இவன் வேற.. சும்மா இருக்க மாட்டான்.. எப்ப பாரு பொண்ணுங்க நெஞ்சுல ஏறி உட்கார்ந்துக்குவான் என்று குறிப்பிட்டு இருப்பார்.

விஜய் சேதுபதியை காமெடியாக கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி அமைந்துள்ளதாக கருதி தற்போது திடீரென விஜய்சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.

உண்மையில் இந்த காட்சி காமெடிக்காக எடுக்கப்பட்டிருந்ததாகவும், இந்த காட்சி குறித்து ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு தெரியும் என்றும் இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *