காந்தாரா: உலகளவில் ரூ.400 கோடி வசூலை கடந்து சாதனை!

காந்தாரா: உலகளவில் ரூ.400 கோடி வசூலை கடந்து சாதனை!

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரைப்படங்கள் பல கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த படங்கள் தோல்வி அடைந்து வரும் நிலையில் வெறும் 15 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த காந்தாரா திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு பிறகு 400 கோடி வசூல் செய்த இரண்டாவது கன்னட படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய இந்தப் படம் உலக அளவில் சாதனை செய்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது