காதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை!

காதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை!

விமல் நடித்த ‘மன்னார் வகையறா’ மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை யாஷிகா. திருப்பூரை சேர்ந்த இவரது இயற்பெயர் மேரி ஷீலா ஜெபராணி. வடபழனி விடுதி ஒன்றில் தங்கி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த நடிகை யாஷிகா, பெரும்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். பின் விடுதியை காலிசெய்துவிட்டு காதலருடன் திருமணம் செய்யாமலேயே பெரபூரில் உள்ள ஒரு வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாஷிகாவின் காதலர் திடீரென அவரிடம் சண்டை போட்டு சென்றுவிட்டதாகவும், இதனால் காதல் தோல்வியால் தனிமையில் வாழ்க்கையை வெறுத்த யாஷிகா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள யாஷிகாவின் காதலரை தேடி வருகின்றனர்.

 

Actress Yashika suicide because of love failure

Leave a Reply