காதலிக்கு திருமணம் செய்து வைத்த அர்ச்சகர் மணமகளுடன் ஓட்டம்!

காதலிக்கு திருமணம் செய்து வைத்த அர்ச்சகர் மணமகளுடன் ஓட்டம்!

தான் காதலித்த பெண்ணுக்கே திருமணம் செய்து வைத்த அர்ச்சகர் ஒருவர், காதலிக்கு திருமணமான இரண்டே வாரத்தில் மணமகளை அழைத்து கொண்டு ஓட்டிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த் வினோத் என்ற அர்ச்சகர் ரீனாபாய் என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் ரீனாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், இந்த திருமணத்தை நடத்தி வைக்க வினோத்தையே புரோகிதராக புக் செய்தனர்.

வேறு வழியில்லாமல் காதலிக்கு திருமணம் செய்து வைத்த அர்ச்சகர் வினோத் அதன் பின்னர் சமயம் பார்த்து திருமணமான 16வது நாளில் ரீனாவை அழைத்து கொண்டு மாயமானார். தற்போது மணமகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply