காண்டம் கூட அணிய தெரியாதா? கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்

காண்டம் கூட அணிய தெரியாதா? கேலிசெய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வாலிபர்

அசாம் மாநிலத்தில் உள்ள கெளஹாத்தின் நகரின் அருகே 23 வயது இளைஞர் ஒருவர் தனது காம இச்சையை தீர்த்துக்கொள்ள பாலியல் தொழிலாளி ஒருவரை அணுகி உள்ளார். ஆயிரத்து 500 ரூபாய் பேரம் பேசி உறவுக்கு தயாரான போது அந்த பாலியல் தொழிலாளி ஒரு காண்டம் எடுத்து கொடுத்து அந்த வாலிபரை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்

அதற்கு அந்த வாலிபர் இது தான் எனக்கு முதல் அனுபவம் என்றும் எனவே காண்டம் எல்லாம் அணிய தெரியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பாலியல் தொழிலாளி அந்த வாலிபரை கேலியும் கிண்டலும் செய்ததாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளியான வாலிபரை தேடி வருகிறார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply