காணாமல் போன 21 மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலின்போது காணாமல் போன 21 மீனவர்களை குடும்பத்திற்கு தலா ரூபாய் 20 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் வீசிய டவ்தேவ் புயலின்போது கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதை அடுத்து அவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை

இந்த நிலையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.