காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் தொடர்பாக வரும் 13, 14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் வைபம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply