‘காஞ்சனா 3’ சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஓவியா நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதன்படி ‘காஞ்சனா 3’ திரைப்படம் வரும் இம்மாதம் 19ஆம் தேதி வெளியாகயுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் இந்த படம் வெளியாகவுள்ளது என்பதால் இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, கபீர்சிங், மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, சத்யராஜ், கிஷோர் உள்பட பலர் இந்த நடித்துள்ளனர்

Leave a Reply