’காசு வாங்கிய நாயே! ஓட்டு போட்டாயா! தோல்வி அடைந்த வேட்பாளரின் போஸ்டரால் பரபரப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக திமுக என இரு கட்சிகளுக்கும் வெற்றி தோல்வி மாறி மாறி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தேர்தல் முடிவில் பல ஆச்சரிய மற்றும் சோக சம்பவங்கள் நடந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் ஒரு வேட்பாளர் தன்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி கூறி போஸ்டர் ஒட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

அதேபோல் மன்னார்குடி அருகே உள்ள கீழப்பனையூர் என்ற கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் தன்னிடம் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடாத வாக்காளர்களை திட்டி ’காசு வாங்கிய நாயே, ஓட்டு போட்டாயா’ என போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டி உள்ளார். இந்த போஸ்டரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply