காங்கிரஸ் தோல்வி எதிரொலி: முக்கிய பொறுப்பாளர் ராஜினாமா

டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அசுர பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பாஜகவிற்கும் தோல்வி தான் என்றாலும் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் கூடுதலான இடங்களை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் கடந்த தேர்தலிலும் சரி இந்த தேர்தலிலும் சரி தேசிய கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு நாட்டின் தலைநகரிலேயே செல்வாக்கு இல்லாத கட்சி, நாட்டின் மற்ற இடங்களில் எப்படி செல்வாக்கைப் பெற முடியும் என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று டெல்லி காங்கிரஸ் பொறுப்பாளர் சாக்கோ என்பவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply