காங்கிரஸ் தோல்விக்கு இதுதான் காரணம்: பிரபல நடிகை பேட்டி

காங்கிரஸ் தோல்விக்கு இதுதான் காரணம்: பிரபல நடிகை பேட்டி

கர்நாடகாவில் தேவேகவுடா கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததாக நடிகை சுமலதா எம்.பி. கூறியுள்ளார்.

சுமலதாவின் கணவர் அம்ரீஷ், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். அவரது மறைவிற்கு பின் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்ட சுமலதாவுக்கு காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு பாஜகவும் ஆதரவு அளித்ததால் மிக எளிதில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுமலதா, ‘மிகப்பெரிய கட்சியான காங்கிரசுக்கு கர்நாடகாவில் ஒரு இடம்தான் கிடைத்து இருக்கிறது. இதற்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த தவறான முடிவுகள்தான் காரணம். அவர்கள் ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்க கூடாது. அதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்று கூறினார்

Leave a Reply