காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்பு:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்பு:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி சற்றுமுன்னர் பதவியேற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராகவும், நேரு குடும்பத்தின் 6வது தலைவராகவும் பதவியேற்று கொண்ட ராகுல் காந்தி பதவியேற்ற பின்னர் பேசியதில் இருந்து சிலவற்றை பார்ப்போம்

காங்கிரஸ் கட்சியே எனது குடும்பம். வரும் காலத்தில் இந்தியாவை நாங்கள் வளப்படுத்துவோம். காங்கிரஸ் கட்சி விளிம்புநிலை மக்களுக்காக, தனக்காக பொராட முடியாத மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறது

பாரதிய ஜனதா கட்சியுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் எங்கள் சகோதர்களாகவே நினைக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் தங்கள் பலத்தால் தான் வெற்றி பெறுகிறார்கள்… நன்மை செய்து வெற்றியடையவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி மக்களின் குரலாக ஒலிக்கும். அன்பு பாசத்தால் தான் எதையும் நாம் சாதிக்க முடியும்

அரசியல் மக்களுக்கானது… அது அவர்களுக்கான ஆயுதமாக இருக்கிறது. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவே நான் அரசியலுக்கு வந்தேன்.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியாகாந்தி கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக கடைசி முறையாக உங்கள் மத்தியில் பேசுகிறேன்; காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துகள்’ என்று கூறினார்

Leave a Reply

Your email address will not be published.