காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி என்னை விமர்சனம் செய்தாரா? வசந்தகுமார் பதில்

காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி என்னை விமர்சனம் செய்தாரா? வசந்தகுமார் பதில்

#காங்கிரஸ் எம்.எல்.ஏ.விஜயதரணி என்னை பற்றி விமர்சனம் செய்து பேசியதாக கூறப்ப்டுவது குறித்து எனக்கு தெரியாது என்றும், தான் எம்.ஏ. படித்துள்ளதாகவும், அதற்கு தகுந்தவாறு பேச்சின் தரம் இருக்கும் என்றும் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது, கட்சி தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் தாம், சீட்டு வாங்குவதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், வெற்றிபெற வாய்ப்பில்லை என தெரிந்தும் 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் வசந்தகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.