காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ்: மாயாவதி எச்சரிக்கையால் பரபரப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ்: மாயாவதி எச்சரிக்கையால் பரபரப்பு

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தாழ்த்தப்பட்டோர் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கி கொள்ள இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இருப்பினும் சத்தீஷ்கரில் மட்டுமே முழு மெஜாரிட்டி கிடைத்ததால் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிஅ மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ஆதரவை விலக்கி கொள்வோம் என்று மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராகவும், வன்கொடுமைகளுக்கு எதிராகவும் மக்களும், விவசாயிகளும் பாரத் பந்த் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடிய, ஒன்றும் அறியாத அந்த மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் அனைத்தும் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசால் பதியப்பட்டவை. தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் அரசானது அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பகுஜன் சமாஜ் கட்சி, மாயாவதி

Leave a Reply