காங்கிரஸ் அகராதியில் இந்த இரண்டிற்கும் இடமில்லை: வைகோ

நட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக தாக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இடம்பெற்றிருந்தன. வைகோ இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக, சென்னை ஆட்சியரகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடியதோடு, நட்பு, நன்றி என்ற இரண்டிற்கும் காங்கிரஸ் அகராதியில் இடமில்லை என்று தெரிவித்தார். வைகோவின் இந்த கருத்தால் காங்கிரஸ் வட்டாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply