காங்கிரஸில் இணைய பிரசாந்த் கிஷோர் திட்டமா?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து தரும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

டெல்லியில் நேற்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து பேசிய பிரசாந்த் கிஷோர் விரைவில் வரவுள்ள உத்தரப்பிரதேச மாநில தேர்தல் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது

மேலும் அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உள்ளதாகவும் 2024 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆளுங்கட்சியாக அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியுடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது