காங்கிரசின் தயவால் நான் எம்பி ஆகவில்லை: வைகோ

காங்கிரசின் தயவால் தான், நான் மாநிலங்களைவை எம்.பி ஆனேன் என கே.எஸ்.அழகிரி சொல்வது தவறு, என்மீதான வன்மத்தால் கே.எஸ்.அழகிரி இதுபோன்று பேசுகிறார் என வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் காஷ்மீர் மசோதாவின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் 12 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அவர்கள் எல்லாம் மத்திய அரசிடம் பணம் வாங்கிவிட்டார்களா? என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தது காங்கிரஸ் என்றும், பிரதமர் மோடியை நேருக்கு நேர் பார்த்து தவறை சுட்டிக்காட்டும் தைரியம் உள்ளவன் நான் என்றும் கூறிய வைகோ, ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்களால் தான் நான் எம்.பி. ஆனேன் என்றும், ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி. ஆனதும் கருணாநிதி தயவால்தான் என்றும் கூறினார்

Leave a Reply