கவினை யாரும் திட்ட வேண்டாம்: சாக்சி வேண்டுகோள்

கவினை யாரும் திட்ட வேண்டாம்: சாக்சி வேண்டுகோள்

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதும், வெளியே வந்த பின்னரும் கவினை காரசாரமாக திட்டிய சாக்சி இன்று தனது டுவிட்டரில் கவினையும் அவரது குடும்பத்தினர்களையும் யாரும் திட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்

கவின் தாயார் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் ஒரு வழக்கில் தண்டனை பெற்ற நிலையில் கவினையும் அவருடைய குடும்பத்தினர்களையும் நெட்டிசன்கள் கடுமையாக திட்டி வருகின்றனர். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறிய சாக்சி, ‘கவின் குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணமான சூழலில் கவினையும் அவரது குடும்பத்தினரையும் யாரும் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை, அவருடைய குடும்பத்தினர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே எனது ரசிகர்கள் கவின் குடும்பத்தினர்களை கிண்டலடிக்க வேண்டாம் மாறாக அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்

Leave a Reply