கவாஜா அபார சதம்: இந்தியாவுக்கு 314 இலக்கு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது

கவாஜா 104 ரன்களும், ஃபின்ச் 93 ரன்களும், மாக்ஸ்வெல் 47 ரன்களும், ஸ்டோனிஸ் 31 ரன்களும், எடுத்தனர்.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் ஆனது

இன்னும் சில நிமிடங்களில் 314 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது

Leave a Reply