“களவாணி 2” படத்திற்கான தடை நீக்கம்: விரைவில் ரிலீஸ் தேதி!

சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “களவாணி 2” திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் நீக்கி உத்தரவிட்டுள்ளது

“களவாணி 2” படத்தை வெளியிடும் உரிமையை பல நிறுவனங்களுக்கு வழங்கி ஒப்பந்த விதிகளை மெரினா பிக்சர்ஸ் மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிக்கவுள்ளனர்.,

Leave a Reply