கல்கி சாமியார் மனைவியுடன் தலைமறைவா? அதிகாரிகள் திணறல்!

கல்கி சாமியார் மனைவியுடன் தலைமறைவா? அதிகாரிகள் திணறல்!

தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள கல்கி பகவானின் ஆசிரமத்தில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 கோடி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கல்கி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் விசாரணை செய்ய அதிகாரிகள் முயன்றபோது கல்கியும் அவரது மனைவியும் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் எங்கே இருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இதுகுறித்து ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தபோது கல்கியை தாங்கள் நேரில் பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறியதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட் மூலம் கல்கியும்அவரது மனைவியும் வெளிநாடு தப்பியிருக்கலாம் என அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Leave a Reply