கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:

கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் இனி நாடு முழுவதும் நுழைவுத்தேர்வு:

இதுவரை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஒவ்வொரு கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் தனித்தனியாக ஒருசில பாடங்களுக்கு மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தி வரும் நிலையில் இனி நாடு முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர பாடவாரியாக ஒற்றை நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத அவசியம் இல்லை என்றும் இந்த புதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி கல்லூரி நிர்வாகத்திற்கும் எளிதாக இருக்கும் என்றும் மத்திய மனிதவள மேம்பாபட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

ஆனால் நீட் தேர்வை போலவே இந்த நுழைவுத்தேர்வையும் அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply