கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: கடலூரில் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: கடலூரில் பரபரப்பு

கடலூர் அருகே வெள்ளிமோட்டான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான 2800 சதுர.அடி இடத்தை அதிமுக முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் சேவல்குமார் என்பவர் கிரயம் செய்துவிட்டு பின்னர் பணம் தருவதாக கூறியவர் இதுவரை பணமும் தராமல் நிலத்தையும் ஒப்படைக்கவில்லை,

காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் .பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தியேலே செந்தில்குமார் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published.