கர்நாடக முதல்வர் இன்று ராஜினாமாவா?

கர்நாடக முதல்வர் இன்று ராஜினாமாவா?

கர்நாடக அமைச்சரவை இன்று கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சரவை கூட்டம் முடிந்த பின்னர் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்ட முதலமைச்சர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அதுமட்டுமின்றி சட்டசபையை கலைக்க அவர் ஆளுநருக்கு பரிந்துரை செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

குமாரசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டதாலும், 2 சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதாலும், பெரும்பான்மை பலத்தை குமாரசாமி தலைமையிலான அரசு இழந்து விட்டதாக கருதப்படுகிறது

இருப்பினும் பாஜக தலைமையிலான அரசு ஏற்படாமல் இருக்க சட்டசபையை கலைக்க குமாரசாமி பரிந்துரை செய்வார் என்று செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.