கர்நாடக முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது

இதனையடுத்து பாஜக ஆட்சி அமைக்க கவர்னர் வஜூபாய் வாலா அழைப்புவிடுத்துள்ளார்

இந்த அழைப்பை ஏற்று இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது

இன்று எடியூரப்பா மட்டும் முதல்வராக பதவியேற்பார் என்றும் மெஜாரிட்டியை நிரூபித்த பின்னர் அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் கர்நாடக மாநிலத்திலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

Leave a Reply