கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ராஜினாமா

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர்களான குமாரசாமி, சித்தராமையா உட்பட பலர் விவாதம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடகா சட்டசபை சபாநாயகர் திடீரென பதவி விலகியுள்ளார். சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகி உள்ளதால் இன்று நடைபெற உள்ள நம்பிக்கை தீர்மானம் யார் தலைமையில் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. துணை சபாநாயகர் தலைமையில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply