கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாகவும், அவர்களிடம் ரிசார்ட்டில் வைத்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். இந்த எம்.எல்.ஏ கூட்டத்தில் ஒருசில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை காங்கிரஸ் கட்சி இன்னும் தெரிவிக்கவில்லை

 

Leave a Reply

Your email address will not be published.