’கர்ணன்’ படத்தில் இந்த தவறு உள்ளது. சுட்டிக்காட்டிய உதயநிதி

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தில் ஒரு தவறு இருப்பதாகவும் அந்த தவறை சரி செய்யவும் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு உதயநிதி வேண்டுகோள் விடுத்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது

கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

மேலும் 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி. என உதயநிதி பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.