திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் மாற்று கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தொழிலதிபர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.’

திமுக மற்றும் முக ஸ்டாலின் உடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடு இருந்தபோதிலும் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி நாகரீக அரசியலை முன் வைத்துள்ளார் கமல் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Leave a Reply