கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ: சபாநாயகரை நீக்க மனு

கருணாஸை சந்தித்த திமுக எம்.எல்.ஏ: சபாநாயகரை நீக்க மனு

நெல்லை போலீசார் கருணாஸ் எம்.எல்.ஏவை கைது செய்ய சென்னைக்கு இன்று அதிகாலை வந்திருந்த நிலையில், இன்று கருணாஸ் எம்.எல்.ஏ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாஸை திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் நெல்லையில் தேவர் பேரவை தலைவரின் காரை எரித்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் கருணாஸ் வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக சட்டப்பேரவை செயலருக்கு கருணாஸ் கடிதம் எழுதியுள்ளதாகவும், சட்டப்பேரவை விதியின்படி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி சபாநாயகரை நீக்க வேண்டும் என்றும் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Reply