கருணாநிதி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் மீளும்: கவியரசு வைரமுத்து

கருணாநிதி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் மீளும்: கவியரசு வைரமுத்து

உடல்நலமின்றி ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை அரசியல் தலைவர்கள் உள்பட பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து வரும் நிலையில் நேற்று மாலை கவிஞரும், கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான வைரமுத்து நேரில் சந்தித்தார்.

கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய வைரமுத்து, \திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தேறி மீண்டு வந்தால் தமிழும், தமிழ்நாடும் மீளும்’ என்று கூறினார். மெலும் கருணாநிதியின் உதடுகள் பேசுவதற்கு முயற்சிப்பதாகவும், அவரது உதடு அசைவுகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து கூறியதில் இருந்து பார்க்கையில் கருணாநிதி மிக விரைவில் பேசும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

Leave a Reply