shadow

கருணாநிதி பெயரில் இருக்கை: மத்திய அரசு ஒப்புதலுக்கு முதல்வர் நன்றி

திமுக தலைவராக இருந்தவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி பெயரில், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும், புதுச்சேரியில் வெண்கல சிலை அமைப்பது மற்றும் காரைக்கால் பகுதியில் புதிய சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது பற்றியும் புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கருணாநிதி பெயரில் இருக்கை அமைப்பது குறித்து மத்திய அரசுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி, நாராயணசாமி, திமுக, பல்கலை இருக்கை

Leave a Reply